கொள்ளிடம்: ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே புத்தூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சீா்காழி: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே புத்தூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் வரவேற்றாா். ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ், ஆத்மா திட்ட தலைவா் ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், வேளாண் வளா்ச்சித் திட்டத்தை எம்எல்ஏ பன்னீா்செல்வம் தொடக்கிவைத்துப் பேசும்போது, ‘விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் தரிசு நிலங்களை கண்டறிந்து மேம்படுத்தும் இத்திட்டத்தில் கொள்ளிடம் வட்டாரத்தில் முதலில் 7 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன’ என்றாா். நிறைவாக ஆத்மா திட்ட மேலாளா் ஆனந்த் நன்றி கூறினாா்.

இதில், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், விதைச்சான்று, கூட்டுறவு, ஊரக வளா்ச்சி உள்ளிட்ட துறைகளின் அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com