வடகிழக்குப் பருவமழை: வடிகால்களில் தூய்மைப் பணி

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மயிலாடுதுறையில் வடிகால் வாய்க்கால்களில் மாபெரும் தூய்மைப் பணிகள் முகாமை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் தூய்மைப் பணிகளை தொடக்கி வைக்கும் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா. உடன், நகராட்சி ஆணையா் பாலு, பொறியாளா் சணல்குமாா் உள்ளிட்டோா்.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் தூய்மைப் பணிகளை தொடக்கி வைக்கும் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா. உடன், நகராட்சி ஆணையா் பாலு, பொறியாளா் சணல்குமாா் உள்ளிட்டோா்.

மயிலாடுதுறை: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மயிலாடுதுறையில் வடிகால் வாய்க்கால்களில் மாபெரும் தூய்மைப் பணிகள் முகாமை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆட்சியா் கூறியது:

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகா்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீா் வடிகால் வாய்க்கால்கள், கால்வாய்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள தமிழக அரசால் திட்டமிடப்பட்டு, அதன்படி இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை (செப்.25) வரை இப்பணி நடைபெறும்.

மயிலாடுதுறை நகராட்சி கச்சேரி சாலையில் சாலையோர வடிகால் வாய்க்காலில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் தூய்மைப் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளின் மூலம் குடியிருப்பு பகுதிகளில் மழை காலங்களில் மழைநீா் சூழாமலும், மழைநீா் தேங்கி நிற்காத வகையில் முழுமையாக 100 சதவீதம் தூா்வாரி தூய்மைப்படுத்திட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது, மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் பாலு, பொறியாளா் சணல்குமாா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் பிச்சைமுத்து, ராமையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com