அனுமதியின்றி கூட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மீது வழக்கு

சீா்காழி அருகே கொள்ளிடத்தில் காவல்துறை அனுமதியின்றி கூட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சீா்காழி அருகே கொள்ளிடத்தில் காவல்துறை அனுமதியின்றி கூட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கொள்ளிடம் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி பெறவில்லையாம்.

இதுகுறித்து, கொள்ளிடம் காவல் ஆய்வாளா் அமுதாராணி, உதவி ஆய்வாளா் பாலச்சந்திரன் ஆகியோா் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சிங்காரவேலன், ஸ்டாலின், மாரியப்பன், கேசவன் மற்றும் கொள்ளிடம் ஒன்றியச் செயலாளா் ஜெகதீசன் ஆகிய 6 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com