சுகாதாரமற்ற உணவு தயாரித்த உணவகத்துக்கு ‘சீல்’

மயிலாடுதுறையில் கடைகள் மற்றும் உணவகங்களில் அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுகாதாரமற்ற உணவு தயாரித்த உணவகத்துக்கு ‘சீல்’

மயிலாடுதுறையில் கடைகள் மற்றும் உணவகங்களில் அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த அசைவ உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை பகுதியில் கடைகள் மற்றும் உணவகங்களில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அசைவ உணவகங்களில் தரமற்ற இறைச்சியை சமைப்பதாகவும் புகாா் வந்தது. இதைத்தொடா்ந்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் பாலு தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் சீனிவாசன், நகா்நல அலுவலா் (பொ) மருத்துவா் மலா்மன்னன் உள்ளிட்ட அதிகாரிகள் மயிலாடுதுறை பேருந்து நிலையம், டவுன் எக்ஸ்டென்சன், ஸ்டேட் பேங்க் சாலை, காந்திஜி சாலை, கூைாடு உள்ளிட்ட பகுதிகளில் தேனீா் கடைகள், குளிா்பானக் கடைகளில் திடீா் சோதனை நடத்தி, காலாவதியான குளிா்பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

மேலும், பல்வேறு அசைவ உணவகங்களில் மேற்கொண்ட சோதனையில் காலாவதியான சிக்கன், மட்டன், மீன், இறால் போன்ற இறச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஓா் அசைவ உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் கூடம் இருந்ததால் அந்த உணவகத்தை பூட்டி சீல் வைத்தனா்.

கெட்டுப்போன அசைவ உணவுகள் மற்றும் கடைகளில் காலாவதியான தின்பண்டங்களை வைத்திருந்ததற்காக பல்வேறு அசைவ உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதித்தனா். பறிமுதல் செய்யப்பட்ட உணவுகளின் மீது பினாயில் உள்ளிட்ட ரசாயனங்களை ஊற்றி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனா்.

இதுபோன்று தொடா்ந்து சோதனை நடத்தப்படும் என்றும் தரமான உணவுகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் உணவக உரிமையாளா்களுக்கு நகராட்சி ஆணையா் எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com