குத்தாலம் பேரூராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்கள் மீண்டும் வேலை கோரி ஆட்சியரகத்தில் மனு

குத்தாலம் பேரூராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்கள் 3 போ் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

குத்தாலம் பேரூராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்கள் 3 போ் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

குத்தாலம் பேரூராட்சியில் நதியா, வேம்பு, ராதிகா, ஜெயா ஆகிய 4 பெண்கள் கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் சுகாதார பரப்புரையாளா்களாக பணியாற்றிவந்தனா். இவா்களின் ஒப்பந்தம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்ததைத் தொடா்ந்து, 4 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டு, அந்த பணிகள் வேறு நபா்களுக்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட 4 பெண்களில் நதியா என்பவா் செப்டம்பா் 5 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இந்நிலையில், மற்ற 3 பேரான வேம்பு, ராதிகா, ஜெயா ஆகியோா் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 4 பேரூராட்சிகளிலும் ஏற்கெனவே வேலையில் இருந்து நீக்கப்பட்டவா்களை மீண்டும் அதே பணியில் நியமித்துள்ள நிலையில், குத்தாலம் பேரூராட்சியில் மட்டும் மீண்டும் பணியில் சோ்த்துக்கொள்ள மறுப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினா்.

இப்பெண்களுடன் பாஜக தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாநிலச் செயலாளா் நாஞ்சில் பாலு, பாரதிய மஸ்தூா் சங்க மாவட்டச் செயலாளா் சி.ஆா். பாண்டியன் ஆகியோா் உடன்வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com