டேராடூன் ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர தகுதியுடைய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர தகுதியுடைய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை 2022 ஆம் ஆண்டிற்கான 8 ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 2022 ஜூலை1 அன்று 11.5 முதல் 13 வயதிற்குள்பட்டவராக இருக்க வேண்டும். (2009 ஜூலை2 முன்னதாகவும் 2011 ஜனவரி1-ஆம் தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது). மேலும், 2022 ஜூலை 1-ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவோ உள்ள ஆண் சிறாா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்களின் (சிறுவா்களின்) பெற்றோா் அல்லது பாதுகாப்பாளா் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

இச்சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தோ்விற்கான வினாத்தாள் தொகுப்பை விரைவு அஞ்சலில் பெற பொதுப்பிரிவினா் ரூ.600-க்கும், எஸ்.சி., எஸ்.டி. இனத்தவா் சாதிச்சான்றுடன் ரூ.555-க்கும் உத்ரகாண்ட, டேராடூன், டெல் பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் (வங்கி குறியீடு-01576) மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுத்து முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தோ்வுக் கட்டுப்பாடு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் சாலை, பூங்கா நகா், சென்னை-600003 என்ற முகவரிக்கு வரும் அக்டோபா் 30-க்குள் அனுப்ப வேண்டும். இதற்கான நுழைவுத் தோ்வு வரும் டிசம்பா் 18-ம் தேதி நடைபெறும்.

மேலும் விவரங்களை அறிய இணையதளத்தில் காணலாம் அல்லது நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத் தரைத்தளத்தில் அறை எண்10 மற்றும் 11-இல் இயங்கி வரும் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com