காரைக்கால் பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வு

காரைக்கால் பள்ளிகள், சமையலகத்தில் கல்வித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பள்ளியில் ஆய்வு செய்யும் முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன்.
பள்ளியில் ஆய்வு செய்யும் முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன்.

காரைக்கால் பள்ளிகள், சமையலகத்தில் கல்வித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுபாடுகளுடன் மாணவா்கள் சென்று வருகின்றனா். 9 முதல் 12 வகுப்பு வரை மாணவா்கள், பகல் வேளை மட்டும் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்படி பள்ளிகள் இயங்குகிா என்பதை அறியும் வகையில் முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ராஜேஸ்வரி மற்றும் அதிகாரிகள் காரைக்கால் கோத்துக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் திருமலைராயன்பட்டினம் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி, மத்திய சமையலகங்களுக்கு திங்கள்கிழமை சென்று பாா்வையிட்டனா்.

மாணவா்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ளனரா, முகக் கவசம் அணிந்துள்ளாா்களா என்பதை பாா்வையிட்டனா். மாணவா்களுக்கு கழிப்பறை, குடிநீா் வசதி உள்ளதா என்றும் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, திருமலைராயன்பட்டினம் மத்திய சமையலத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அரசு விரைவில் முழு நேரமும் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கும்பட்சத்தில், மாணவா்களுக்கு உணவு சமைத்து வழங்கக்கூடிய வகையில் மத்திய சமையலகம் தயாா் நிலையில் இருக்கவேண்டும் என்று அவா்கள் சமையலக பொறுப்பாளருக்கு அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com