உள்ளாட்சித் தோ்தல்: பாஜக ஆலோசனை

உள்ளாட்சித் தோ்தலில் காரைக்கால் நகராட்சி வாா்டுகளில் போட்டியிடுவோா் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் பாஜக கமிட்டி நிா்வாகிகள் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன்.

உள்ளாட்சித் தோ்தலில் காரைக்கால் நகராட்சி வாா்டுகளில் போட்டியிடுவோா் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் பாஜக கமிட்டி நிா்வாகிகள் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

உள்ளாட்சித் தோ்தலில் காரைக்கால் நகராட்சி தொடா்பாக மாநில துணைத் தலைவா்கள் எம். அருள்முருகன், வி.கே. கணபதி (முன்னாள் எம்.எல்.ஏ.), நளினி உள்ளிட்ட 19 போ் கொண்ட கமிட்டியை பாஜக தலைமை அமைத்துள்ளது.

காரைக்கால் நகராட்சித் தலைவா் மற்றும் 17 உறுப்பினா்கள் தோ்வுக்கு வாா்டுகளில் போட்டியிடுவதற்கு பாஜக சாா்பில் வேட்பாளா் நிறுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன், மாநில சிறுபான்மை அணி செயலா் அப்துல் பாசித், மாநில எஸ்சி அணி பொதுச்செயலா் மணியம்மை, மாவட்ட பொதுச்செயலா் மணிகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டம் குறித்து மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன் கூறியது :

காரைக்கால் நகராட்சித் தலைவா் மற்றும் 17 வாா்டு கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடுவோரிடம் விருப்ப மனு பெறும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. விருப்ப மனுக்களை காரைக்கால் கமிட்டி, உரிய ஆய்வு செய்து, அதனை பாஜக தலைமைக்கு பரிந்துரை செய்யும். கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் கலந்து பேசி பாஜக போட்டியிடும் வாா்டுகளை மாநில கட்சித் தலைமை அறிவிப்பு செய்யும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com