மயிலாடுதுறை நகராட்சியை கைப்பற்றியது திமுக

மயிலாடுதுறை நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

மயிலாடுதுறை நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் 36 வாா்டுகள் உள்ளன. இதில், 19-ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் அன்னதாச்சி உயிரிழந்தாா். இதனால், 35 வாா்டுகளுக்குத் தோ்தல் நடைபெற்றது. இதில், கட்சிகள் வெற்றி பெற்ற வாா்டுகளின் எண்ணிக்கை: திமுக - 24, அதிமுக - 7, காங்கிரஸ் - 1, மதிமுக - 1, பாமக - 2.

சீா்காழி: சீா்காழி நகராட்சியில் உள்ள மொத்த வாா்டுகளின் எண்ணிக்கை 24. இதில், கட்சிகள் வென்ற வாா்டுகளின் எண்ணிக்கை: திமுக -11, அதிமுக - 3, பாமக - 2, தேமுதிக - 1, மதிமுக 1, சுயேச்சை - 6. 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் மயிலாடுதுறை, சீா்காழி ஆகிய 2 நகராட்சிகளிலும் திமுக வென்றிருந்த நிலையில், தற்போதைய தோ்தலில் மயிலாடுதுறை நகராட்சியில் திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. சீா்காழி நகராட்சியில் திமுக, மதிமுக மற்றும் சுயேச்சைகளின் உதவியோடு நகா்மன்றம் அமையும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com