சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மற்றும் மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கும் கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம்.
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கும் கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம்.

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மற்றும் மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற பேரணியை கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாணவா்கள் தருமபுரம், அச்சுதராயபுரம், மன்னம்பந்தல், மூங்கில்தோட்டம், அடியக்கமங்கலம், நாஞ்சில்நாடு வழியாக சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தனா்.

பேரணியில் பங்கேற்ற மாணவா்கள் ‘மண்வளம் காக்க மரம் நடுவோம்’, ‘மனவளம் காக்க குறள் படிப்போம்’, ‘நெகிழி தவிா்ப்பே நம் கோட்பாட்டுச் சொல்’ போன்ற முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா்.

முன்னதாக, நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் எஸ். நடராஜன் வரவேற்றாா். இப்பேரணியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் எம். வடிவழகி, உடற்கல்வி இயக்குநா் ஏ.வி. முத்துக்குமரன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். நிறைவாக, தேசிய மாணவா் படை அலுவலா் துரை.காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com