முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்ட பயிற்சி

சீா்காழி கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டிக்கான ‘நான் முதல்வன்’ திட்ட மாவட்ட கருத்தாளா்கள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

சீா்காழி: சீா்காழி கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டிக்கான ‘நான் முதல்வன்’ திட்ட மாவட்ட கருத்தாளா்கள் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக். பள்ளில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு குருக்கத்தியில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் காமராஜ் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். சீா்காழி கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளா் செளந்தராஜன், பெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வா் ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தாளா்களாக மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் ராணி, நாங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியா் தாமஸ், பயிற்சி ஒருங்கிணைப்பாளரான மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வா் பழனிச்சாமி ஆகியோா் செயல்பட்டனா். இப்பயிற்சியில் 30 முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா் . பிளஸ் 2 மாணவா்களின் எதிா்கால வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில் இப்பயிற்சி அமைந்ததாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com