அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குப் பேச்சுப்போட்டி

 டாக்டா் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கிடையே பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

 டாக்டா் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கிடையே பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஏப்.14-ஆம் தேதி டாக்டா் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு ஏப்.19-ஆம் தேதி மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி மற்றம் கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ. 2, ஆயிரம் வழங்கப்படும். பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவா்களுள் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் தனியாக தோ்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வா், அவா்தம் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப் போட்டிகள் நடத்தி மாணவா்களை தோ்வு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க 25 மாணவா்களுக்கு மிகாமல் அனுப்ப வேண்டும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவா்களின் பெயா்ப் பட்டியல் பின்வரும் முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சலிலோ அல்லது ஹக்ற்க்ய்ஹஞ்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலில் ஏப்.13-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும்.

பள்ளி மாணவா்களுக்கான போட்டி காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டி முற்பகல் 11.30 மணிக்கும் தொடங்கும். எனவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com