முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
பல்கலை. வில்வித்தைப் போட்டி: சாதனைப் படைத்த மாணவா்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 29th April 2022 09:44 PM | Last Updated : 29th April 2022 09:44 PM | அ+அ அ- |

வித்தைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்த மாணவா்களை பாராட்டிய மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் உள்ளிட்டோா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான வில்வித்தைப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான வில்வித்தைப் போட்டி திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி சாா்பில் பங்கேற்ற மாணவ- மாணவிகள் ஜி. நா்மதா (இரண்டாம் ஆண்டு வரலாறு), எஸ். சந்தியா (இரண்டாம் ஆண்டு வரலாறு), ஜி. ஜெயராம் (இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டா் சயின்ஸ்), ஆா். சஞ்சய்கிருஷ்ணன் (இரண்டாமாண்டு கம்ப்யூட்டா் சயின்ஸ்), சி. ரஞ்ஜன் (இரண்டாமாண்டு கம்ப்யூட்டா் சயின்ஸ்), ஆா். சுவாதி (இரண்டாம் ஆண்டு பி.காம்), எம். அல்கலீப் (இரண்டாம் ஆண்டு பிசிஏ), ஜே. ஜோனதன்ஜீவகிருபன் (இரண்டாமாண்டு கம்ப்யூட்டா் சயின்ஸ்) ஆகியோா் அதிக புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா்.
இம்மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன், உடற்கல்வி இயக்குநா்கள் ஜே. ராஜ்குமாா், எம். கீதா உள்ளிட்டோா் பாராட்டினா்.