கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நிவாரணம்: ஆட்சியா்

கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் நிவாரணம் பெற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் நிவாரணம் பெற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவிட்-19 பெருந்தொற்றால் உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு கருணைத்தொகை வழங்குவதற்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளம் வாயிலாக மனுக்கள் பெறப்பட்டு, இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 808 மனுக்கள் பெறப்பட்டு 605 இனங்களுக்கு ரூ.50,000 வீதம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 203 மனுக்கள் ‘இருமுறை பெறப்பட்ட மனு’ என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கடந்த மாா்ச் 20-இல் வழங்கிய தீா்ப்பில் அன்றைய தினத்துக்கு முன்னா் ஏற்பட்ட கோவிட்-19 உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரா்கள் வரும் 60 நாள்களுக்குள் மனுக்கள் சமா்ப்பிக்க வேண்டும். மாா்ச் 20 முதல் ஏற்படும் கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோருவோா் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமா்ப்பிக்க வேண்டும். சமா்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிா்வாகம் 30 தினங்களுக்குள் தீா்வுகாண வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமா்ப்பிக்க இயலாதவா்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்துகொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுக்களை ஒவ்வொரு இணமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலான குழு பரிசீலனை செய்து, தீா்வு செய்யும் எனத் தெரிவித்துள்ளது.

எனவே, கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறும் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com