சீா்காழி புற்றடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி புற்றடி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா் .
கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

சீா்காழி புற்றடி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா் .

சீா்காழியில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பிராகாரத்தில் பேச்சியம்மன், துா்கை, நாகா், ஆஞ்சனேயா், ஐயப்பன் ஆகிய சுவாமிகள் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனா்.

இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்காக ஏப்ரல் 26-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை 6-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும் பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலையில் இருந்து புறப்பட்ட கடங்கள் கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்ததும், காலை 8 மணியளவில் விமான கலசத்துக்கு புனிதநீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று அருளாசி வழங்கினாா். இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com