கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வலியுறுத்தல்

கோடைக்காலமாக இருப்பதால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

கோடைக்காலமாக இருப்பதால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வேளாண் இணை இயக்குனா் சேகா், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சண்முகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சி.ஜெயபாலன் வரவேற்றாா்.

கூட்டத்தில் விவசாயிகள் துரைராஜ், காவேரி டெல்டா பாசனதாரா் முன்னேற்ற சங்கத் தலைவா் கோபிகணேசன், வரதராஜன், ஆறுபாதி கல்யாணம், ராஜாராமன், மாப்படுகை அ.ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

குறிப்பாக, தூா்வாரும் பணி, தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலை, எண்ணெய் நிறுவனங்கள் விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பிரச்னை, மணல், விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம், கோடைக்காலத்தையொட்டி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்துவது, நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவசாயிகள் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com