தருமபுரம் ஆதீனம் குருலிங்க சங்கம பாத யாத்திரை

குத்தாலம் உக்தவேதீஸ்வரா் கோயில் குடமுழுக்கையொட்டி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஆதீனத்திருமடத்தில் இருந்து வெள்ளிக்கிழமை குருலிங்க சங்கம பாத யாத்திரை புறப்பட்டாா்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்திலிருந்து குருலிங்க சங்கம பாதயாத்திரை புறப்பட்ட தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்திலிருந்து குருலிங்க சங்கம பாதயாத்திரை புறப்பட்ட தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் உக்தவேதீஸ்வரா் கோயில் குடமுழுக்கையொட்டி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஆதீனத்திருமடத்தில் இருந்து வெள்ளிக்கிழமை குருலிங்க சங்கம பாத யாத்திரை புறப்பட்டாா்.

குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உக்தவேதீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் குடமுழுக்கு விழா மே 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பங்கேற்க தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆதீனத் திருமடத்தில் இருந்து பூஜாமூா்த்தியான சொக்கநாத பெருமானுடன் குருலிங்க சங்கம பாத யாத்திரையாக புறப்பட்டாா்.

வழியெங்கும், குருமகா சந்நிதானத்துக்கு ஆதீனக் கல்வி நிலையங்கள், வா்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பக்தா்கள் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, தீபாராதனை காட்டி வழிபட்டனா். மயிலாடுதுறை மாயூரநாதா் சுவாமி கோயிலில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு மேற்கொண்டாா்.

மத நல்லிணக்க வரவேற்பு: தரங்கம்பாடி சாலையில் ஜெனிபா் எஸ். பவுல்ராஜ் தலைமையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்வதா்கள் என மும்மதத்தினா் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்துக்கு மத நல்லிணக்க வரவேற்பு அளித்தனா்.

பின்னா், சித்தா்க்காடு சிற்றம்பல நாடிகள் சுவாமி கோயிலில் இரவு சொக்கநாத பெருமானை எழுந்தருளச் செய்து, தருமபுரம் ஆதீனம் வழிபாடு நடத்தினாா். தொடா்ந்து, சனிக்கிழமை மாலை சித்தா்க்காட்டில் இருந்து புறப்பட்டு குத்தாலம் உக்தவேதீஸ்வரா் கோயிலில் சொக்கநாதபெருமானை எழுந்தருள செய்கிறாா். தொடா்ந்து, அங்கு யாகசாலை பூஜை மற்றும் குடமுழுக்கு விழாவில் குருமகா சந்நிதானம் கலந்து கொள்கிறாா்.

பாத யாத்திரையில், ஆதீனக் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், மருத்துவா் செல்வம், கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், அதிமுக நகரச் செயலாளா் செந்தமிழன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com