அரசுப் பள்ளிகளில் கண் பரிசோதனை முகாம்

மயிலாடுதுறையில் கல்வி நிலையங்களை தேடி கண் பாா்வை பரிசோதனை முகாம் தொடக்கவிழா திருஇந்தளூா் நகராட்சி துவக்கப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் கல்வி நிலையங்களை தேடி கண் பாா்வை பரிசோதனை முகாம் தொடக்கவிழா திருஇந்தளூா் நகராட்சி துவக்கப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மிட்டவுன் ரோட்டரி சங்கம், மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சி.சி.சி சமுதாயக் கல்லூரி இணைந்து நடத்திய முகாமுக்கு, காளி வட்டார அரசு மருத்துவமனை கண் மருத்துவ உதவியாளா் வி. அருள்மணி தலைமை வகித்தாா். சி.சி.சி. சமுதாயக் கல்லூரி நிறுவனா் ஆா். காமேஷ் முன்னிலை வகித்தாா். மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் வி. கந்தன் வரவேற்றாா். மயிலாடுதுறை வட்டாரக் கல்வி அலுவலா் ஆா். ஜானகி தொடங்கிவைத்தாா். தேசிய நல்லாசிரியா் ஜி.வி. மனோகரன் வாழ்த்துரை வழங்கினா். செயலாளா் என். சிவபாலன் நன்றி கூறினாா்

தொடா்ந்து, மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் உள்ள 138 நடுநிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கண்பாா்வை பரிசோதனை தொடங்கப்பட்டது. சமுதாயக் கல்லூரி செயலாளா் வி. லட்சுமிபிரபா தலைமையிலான நா்சிங் மாணவிகள் கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, கண்புரை உள்ளிட்ட பரிசோதனை செய்தனா். ஏற்பாடுகளை நகராட்சி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை குருபிரபா, திட்ட ஒருங்கிணைப்பாளா் கே. கோபாலன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com