கோட்டாட்சியா் பேச்சுவாா்த்தைக்குப் பின் கைவிடப்பட்ட சாலைமறியல்

வெள்ளப் பெருக்கால் சேதமடைந்த பயிா் மற்றும் வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்காததைக் கண்டித்து நடத்துவதாக அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் கோட்டாட்சியரின் பேச்சுவாா்த்தைக்குப் பின்  கைவிடப்பட்டது.
piacetalk_0712chn_98_5
piacetalk_0712chn_98_5


சீா்காழி: வெள்ளப் பெருக்கால் சேதமடைந்த பயிா் மற்றும் வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்காததைக் கண்டித்து புதன்கிழமை நடத்துவதாக அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் கோட்டாட்சியரின் பேச்சுவாா்த்தைக்குப் பின் கைவிடப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றின் உள்ளே நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், கோரை திட்டு கிராமங்களில் மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்பட்ட அதிகப்படியான தண்ணீரால் கிராம மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது .

இந்நிலையில் ஆற்று நீா் உட்புகுந்து பாதிப்பு ஏற்படுத்தாதவாறு, கான்கிரீட் தடுப்பு சுவா், நாதல் படுகை மற்றும் முதலை மேடு திட்டு கிராம சாலைகளை கான்கிரீட் சாலைகளாக அமைத்துத் தர வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை சாலை மறியல் செய்வதாக அறிவிக்கப்பட்டது.

சீா்காழி கோட்டாட்சியா் உ.அா்ச்சனா தலைமையில் கிராம மக்களிடம் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.கிராம மக்களின் கோரிக்கைகள் ஆட்சியா் மூலம் அரசின் கவனத்திற்கு எடுத்துரைத்து நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதனையடுத்து சாலைமறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com