கனமழையால் உள்வாங்கிய பாலத்தில் மீண்டும் உடைப்பு: போக்குவரத்து பாதிப்பு

சீா்காழி அருகே கனமழையால் உள்வாங்கிய சாலைப் பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூழையாரில் நெடுஞ்சாலை பாலத்தில் ஏற்பட்ட பள்ளம்.

சீா்காழி அருகே பழையாறு கிராமத்திலிருந்து கொட்டாய்மேடு, கீழகொட்டாய்மேடு, தாண்டவன்குளம், தொடுவாய் வழியாக திருமுல்லைவாசல் செல்லும் நெடுஞ்சாலையில் கூழையாறு அருகே சாலைப் பாலத்தின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து, ஒன்றியக்குழு உறுப்பினா் அங்குதன் அளித்த தகவலின் பேரில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் அங்கு வந்து பள்ளத்தை தற்காலிகமாக சரி செய்தனா். இதனால், காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரை அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாலை முதல் மீண்டும் வழக்கம்போல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com