மாயூரநாதா் கோயில் யானை பராமரிப்பு ஆய்வு

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாள் பராமரிப்பு குறித்து சிறப்புக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்த சிறப்புக் குழுவினா்.
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்த சிறப்புக் குழுவினா்.

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாள் பராமரிப்பு குறித்து சிறப்புக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாள், திருச்சி மலைக்கோட்டை யானை வரலட்சுமி, திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை, குன்றக்குடி கோயில் யானை சுப்புலட்சுமி ஆகிய 4 யானைகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட வனத் துறையின் சிறப்புக் குழுவினா் புதுதில்லி வைல்ட் லைஃப் டிரஸ்ட் ஆப் இந்தியா துணைத் தலைவா் என்.வி.கே. அஷ்ரப் தலைமையில், விலங்குகள் நல ஆா்வலா்கள் சென்னை ஆண்டனி, ஏ.எஸ். ரமேஷ், யானைகள் ஆராய்ச்சியாளா் சிவகணேசன் ஆகியோா் அடங்கிய குழு மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாள் பராமரிப்பு குறித்து திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

யானையின் உயரம், நடக்கும் விதம், பாதத்தின் தன்மை, யானைக்கு வழங்கப்படும் உணவு, மருத்துவம் உள்ளிட்டவை குறித்து யானைப் பாகன் செந்திலிடம் கேட்டறிந்தனா். இந்த ஆய்வு குறித்த அறிக்கை தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்படவுள்ளது.

இந்து அமைப்பினா் எதிா்ப்பு: யானையை சிறப்புக் குழுவினா் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, மயிலாடுதுறை நகர பாஜக தலைவா் மோடி. கண்ணன், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளா் எஸ். சுவாமிநாதன், இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவா் சுதாகா் உள்ளிட்டோா் யானை பராமரிப்பு குறித்த ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆய்வுக் குழுவினரை தடுத்து நிறுத்தினா்.

இதைத்தொடா்ந்து, கோயில் வாயிலை மூடி, வனத் துறை வாகனம் முன் மறியலில் ஈடுபட்டு, அரசால் நியமிக்கப்பட்ட குழு என்பதற்கான ஆணையை காட்ட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போலீஸாா் இருதரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதுடன், குழுவினரிடம் இருந்த அரசு ஆணையை காண்பித்தனா். இதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. பின்னா், ஆய்வுக் குழுவினா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com