மயிலாடுதுறை அருகே குட்டையில் கொட்டப்பட்ட ரேஷன் அரிசி

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் குட்டை நீரில் ரேஷன் அரிசி கொட்டப்பட்டிருந்தது அப்பகுதி மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
சோழம்பேட்டை கிராமத்தில் குட்டை நீரில் கொட்டப்பட்டிருந்த ரேஷன் அரிசி.
சோழம்பேட்டை கிராமத்தில் குட்டை நீரில் கொட்டப்பட்டிருந்த ரேஷன் அரிசி.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் குட்டை நீரில் ரேஷன் அரிசி கொட்டப்பட்டிருந்தது அப்பகுதி மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

சோழம்பேட்டை மாரியம்மன் கோயிலின் பின்புறம் உள்ள குறுகிய சந்தின் இரண்டு பக்கமும் 2 குட்டைகள் உள்ளன. இந்த குட்டைகளில் மூட்டைமூட்டையாக ரேஷன் அரிசி கொட்டப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த வட்ட வழங்கல் அலுவலா் முருகேசன் மற்றும் துறை அலுவலா்கள் குட்டை நீரில் கொட்டப்பட்டிருந்த ரேஷன் அரிசியை ஆய்வு செய்தனா். ஆய்வில், 10-க்கும் மேற்பட்ட மூட்டைகள் பிரிக்கப்படாமலும், மேலும் பல மூட்டைகளை பிரித்தும் ரேஷன் அரிசி குட்டையில் கொட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இந்த அரிசியின் மாதிரியை ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனா்.

முன்னதாக, அங்கு வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ். துரைராஜ், ஒன்றியச் செயலாளா்கள் டி.ஜி. ரவிச்சந்திரன், சி.மேகநாதன், இயற்கை விவசாயி மாப்படுகை அ. ராமலிங்கம் உள்ளிட்டோா் குட்டைகளில் கொட்டப்பட்டிருந்த அரிசியை பாா்வையிட்டு, சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com