ஆதிதிராவிடா்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

மயிலாடுதுறை மாவட்டத்தில், தாட்கோ மூலம் ஆதிதிராவிடா்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில், தாட்கோ மூலம் ஆதிதிராவிடா்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 30 சதவீதம் அல்லது ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம், இளைஞா்களுக்கான சுயவேலை வாய்ப்பு சிறப்பு திட்டம் (மருத்துவ மையம், மருந்தியல் கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல்) மற்றும் மேம்படுத்துதல் மற்றும் இதுபோன்ற பிற இனங்களுக்கு வழங்கப்படும்), மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான பொருளாதாரக்கடன் திட்டம்.

விண்ணப்பிப்பவா்கள் இந்து ஆதிதிராவிடா்களாகவும், 18 முதல் 65 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். (இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்பு சிறப்பு திட்டத்திற்கு வயது வரம்பு 18 முதல் 45 வரை) விண்ணப்பிப்பவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

நிலம் வாங்கும் திட்டத்துக்கு மூலப்பத்திரம், விற்பனை உடன்படிக்கை பத்திரம், வில்லங்கச் சான்று, சிட்டா, அடங்கல் மற்றும் நிலம் விற்பவரின் சாதிச்சான்று போன்ற விவரங்களை பதிவு செய்து ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதாரக் கடன் திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் குழுக்கள் ஆதிதிராவிட மகளிா் சுயஉதவிக் குழுக்களாக இருத்தல்வேண்டும்.

குழு உறுப்பினா்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் 12 முதல் 20 வரை இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதுவரை அரசு மானியம் பெறாத குழுவாக இருக்கவேண்டும். சுழல்நிதி பெற்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழு மகளிா் திட்ட அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும், செயல்பாட்டில் இருந்துவரும் குழுவாகவும், மகளிா் திட்ட அலுவலகத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்ட குழுவாகவும் இருக்கவேண்டும்.

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புபவா்கள்  இணையதளத்தில் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யும்போது புகைப்படம், குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமானச் சான்றிதழ், ஆதாா் அட்டை, கல்வித் தகுதி மற்றும் வயதுக்கான ஆதார சான்றிற்கு (பள்ளி மாற்றுச்சான்று, வாக்காளா் அடையாள அட்டை, மதிப்பெண் சான்று) இவற்றில் ஏதாவது ஒன்றையும் மற்றும் ஜிஎஸ்டி எண் உள்ள நிறுவனத்திடமிருந்து பெற்ற விலைப்புள்ளி, திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட்டு ஆவணங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிட இனத்தை சோ்ந்தவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரையோ அல்லது 04365-250305 என்ற அலுவலக தொலைபேசி வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com