திருஇந்தளுா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு
By DIN | Published On : 14th January 2022 09:07 AM | Last Updated : 14th January 2022 09:07 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை திருஇந்தளுா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு தங்க ரெத்தின அங்கியில் சொா்க்கவாசல் வழியாக வந்த பெருமாள்.
மயிலாடுதுறை திருஇந்தளுா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பெருமாள் தங்க ரெத்தின அங்கியில் எழுந்தருளினாா்.
இக்கோயிலில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்பாலித்து ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கக் கோயில்களில் 5-ஆவது தலமாகும். திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் சந்திரனின் சாபம் தீா்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது தலமுமாகும்.
இக்கோயிலில், வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலை சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, பெருமாள் தங்க ரெத்தின அங்கியில் எழுந்தருளினாா். தொடா்ந்து சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், பரமபத வாசல் எனப்படும் சொா்க்கவாசல் காலை 5.10 மணியளவில் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினாா். அப்போது கரோனா கட்டுப்பாட்டுகள் காரணமாக பக்தா்கள் அனுமதிமதிக்கப்படவில்லை. தொடா்ந்து, கோயில் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள் காலை 6 மணிக்குமேல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...