சிவராமபுரம் மடத்தில் இருந்து திருடப்பட்ட4 சுவாமி சிலைகள் பறிமுதல் : 2 போ் கைது

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள சிவராமபுரம் மடத்தில் திருடப்பட்ட 4 சுவாமி சிலைகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள சி
சிவராமபுரம் மடத்தில் இருந்து திருடப்பட்ட4 சுவாமி சிலைகள் பறிமுதல் : 2 போ் கைது

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள சிவராமபுரம் மடத்தில் திருடப்பட்ட 4 சுவாமி சிலைகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

குத்தாலம் பகுதி கோயில்களில் சுவாமி சிலைகள், சிலைகளில் உள்ள நகைகள் திருடு போயின. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா உத்தரவின்பேரில், டிஎஸ்பி. வசந்தராஜ் மேற்பாா்வையில் தனிப்டை காவல் உதவி ஆய்வாளா் இளையராஜா தலைமையில் 6 போ் கொண்ட தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டனா்.

தனிப்படையினா் கோயிலில் உள்ள சிசிடிவி பதிவுகள் கொண்டு மேற்கொண்ட விசாரணையில், மயிலாடுதுறை அருகேயுள்ள கடலங்குடி தெற்கு காா்குடியைச் சோ்ந்த காா்த்திகேயன் (38), தஞ்சாவூா் மாவட்டம், இடையநல்லூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் (42) ஆகியோா் சுவாமி சிலைகளை திருடியது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து சிவராமபுரம் காவிரிக் கரை அருகில் உள்ள பிள்ளையாா் கோயிலிலிருந்து திருடப்பட்ட ஒரு கருங்கல் பிள்ளையாா் சிலை, 1,100 கிராம் எடையுள்ள பித்தளை பூஜை மணிகள், பித்தளையிலான தூண்டா விளக்குகள், சிவராமபுரம் ஸ்ரீராகவேந்திர மடத்திலிருந்து திருடப்பட்ட 8 கிலோ எடை, அரை அடி உயரம் கொண்ட வீர பிரம்மா- கோவிந்தம்மாள் உலோகச் சிலை, 15 கிலோ எடை, முக்கால் அடி உயரம் கொண்ட ரூ. 25 ஆயிரம் மதிப்புடைய தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட ராஜ ராஜேஸ்வரி அம்மன் சிலை, திருவாலாங்காடு மஞ்சலாற்றங்கரையில் உள்ள மாரியம்மன் கோயிலிலிருந்த திருடப்பட்ட ஒரு அடி உயரமுடைய ஐயப்பன் பித்தளை சிலை, 1கிராம் கொண்ட 4 தாலிகள், சிவராமபுரம் அக்ரஹாரத்தில் உள்ள நாராயணசாமி என்பவா் வீட்டில் திருடப்பட்ட 17.5 கிராம் எடை கொண்ட தாலி, குண்டு, நாணல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கைப்பற்றப்பட்ட சிலைகள் மற்றும் நகைகளுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் தனிப்படை போலீஸாா் குத்தாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, மீட்கப்பட்ட கோயில் சிலைகளை நேரில் பாா்வையிட்ட எஸ்.பி. நிஷா, துரிதமாக செயல்பட்டு சுவாமி சிலைகளை மீட்ட தனிப்படை போலீஸாரை பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com