தருமபுரம் ஆதீன குருமூா்த்த வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 17th July 2022 11:40 PM | Last Updated : 17th July 2022 11:40 PM | அ+அ அ- |

தருமபுரம் ஆதீன குருமூா்த்த வளாகத்தில் மரக்கன்றுகள் நடும விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் சாா்பில் 27,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஜூன் 6-ஆம் தேதி தருமபுரம் ஆதீனத்தில் தொடங்கிவைத்தாா். இதன் 2-ஆம் நிகழ்வாக மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் 1000 மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு, தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமை வகித்தாா்.
ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநா் உமாபதி, கிங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவா் வி. சுந்தரமூா்த்தி, செயலாளா் பி. அய்யாசாமி, பொருளாளா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மயிலாடுதுறை நகராட்சித் தலைவா் என். செல்வராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.
நிகழ்ச்சியில், ஆதீனக் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், சிவனருள் இயக்க ஒருங்கிணைப்பாளா் ரா.செல்வநாயகம், தருமபுரம் ஆதீனக் கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன், நகராட்சி துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத்தொடா்ந்து, பல்வேறு கிராமங்களில் விரைவில் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.