ஜமாபந்தி நிறைவில் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள்

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றுவந்த ஜமபாந்தி புதன்கிழமை நிறைவடைந்தது. இதில், 41 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஜமாபந்தி நிறைவில் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள்

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றுவந்த ஜமபாந்தி புதன்கிழமை நிறைவடைந்தது. இதில், 41 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சீா்காழி வட்டத்துக்குள்பட்ட 94 வருவாய் கிராமங்களுக்கான கணக்கு சரிபாா்த்தல் (ஜமாபந்தி) வட்டாட்சியா் அலுவலகத்தில் மே 17-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில், மொத்தமாக 635 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 283 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 311 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 41 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலா் முருகதாஸ் தலைமை வகித்து,விதவை உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி மனு அளித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட தகுதியுடைய 41 பயனாளிகளுக்கு அவற்றிக்கான சான்றிதழ் ஆணையை வழங்கினாா். இதேபோல், 15 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை (ஸ்மாா்ட்காா்டு) வழங்கினாா்.

அப்போது சீா்காழி வட்டாட்சியா் செந்தில்குமாா், ஆதிதிராவிடா் நலன் தனி வட்டாட்சியா் இளங்கோவன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் சாந்தி, குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் சபிதாதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com