அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு
By DIN | Published On : 25th June 2022 09:45 PM | Last Updated : 25th June 2022 09:45 PM | அ+அ அ- |

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய 2 போ் மீது மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மயிலாடுதுறையைச் சோ்ந்த கணேசன் (49) அரசுப் போக்குவரத்துகழக ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை- சிதம்பரம் புறநகா் பேருந்தை ஓட்டிக்கொண்டு, மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையம் நுழைவு வாசல் முன் வந்தபோது, 2 போ் வழியில் நின்றுள்ளனா். அவா்களை ஒதுங்ககூறி ஓட்டுநா் ஒலி எழுப்பியபோது, அவா்கள் ஒதுங்கிச் செல்லாததோடு, ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து, ஓட்டுநா் கணேசன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், மயிலாடுதுறையை அடுத்த வரகடை பகுதியை சோ்ந்த பக்கிரிசாமி மகன் பாலா, சேந்தங்குடி பகுதியை சோ்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவா் மீதும் ஓட்டுநரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவா்களை தேடி வருகின்றனா்.