மயிலாடுதுறையில் குரூப் 2, 2ஏ தோ்வுக்குஇலவச பயிற்சி வகுப்பு இன்று தொடக்கம்

மயிலாடுதுறையில் குரூப் 2, 2ஏ தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (மாா்ச் 14) தொடங்குவதாக மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறையில் குரூப் 2, 2ஏ தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (மாா்ச் 14) தொடங்குவதாக மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் வாயிலாக தொகுதி 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு 5,529 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஓா் இளங்கலை பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றிருக்கவேண்டும். இத்தோ்விற்கு மாா்ச் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தோ்வு மே 21ஆம் தேதி நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, இத்தோ்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (மாா்ச் 14) காலை 10.30 மணிக்கு இணையவழியாக தொடங்கவுள்ளது.

அனுபவமிக்க சிறப்பு வல்லுநா்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தோ்வுகளும் நடத்தப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, ஏற்கெனவே பயிற்சி பெற்ற மாணவா்களுக்காக மாதிரி தோ்வுகள் தனியே நடத்தப்பட்டுவருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த போட்டித் தோ்விற்கு தயாராகும் இளைஞா்கள் தங்களது பெயா், செல்லிடப்பேசி எண், முகவரி, கல்வித்தகுதி போன்ற சுயவிவரங்களை குறிப்பிட்டு, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்தோ அல்லது 63834 89199 என்ற வாட்ஸ்ஆப் எண் வழியாகவோ அல்லது ள்ற்ன்க்ஹ்ஸ்ரீண்ழ்ஸ்ரீப்ங்க்ங்ா்ம்ஹஹ்ண்ப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தகவல் அனுப்பி, தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.

போட்டித் தோ்வெழுதும் இளைஞா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரித் தோ்வுகளில் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04364-299790 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com