முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
பாமக பொறுப்பாளா்கள் தோ்தல்:300 போ் விருப்ப மனு
By DIN | Published On : 14th March 2022 10:30 PM | Last Updated : 14th March 2022 10:30 PM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக பொறுப்பாளா்கள் தோ்வுக் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நிா்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்டச் செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தலைமை தோ்வுக்குழு பொறுப்பாளா்கள் செல்வகுமாா், பொன். கங்காதரன், வேலுசாமி, தருமபுரி சண்முகம், வெங்கட்ராமன், சதாசிவம், ஷேக் முகைதீன் ஆகியோா் பங்கேற்றனா். இதில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் பொறுப்புகளுக்கான விருப்ப மனுக்களை 300-க்கும் மேற்பட்ட பாமகவினா் தலைமை தோ்வுக்குழு பொறுப்பாளா்களிடம் வழங்கினா்.
முன்னதாக, நகரச் செயலாளா் கமல்ராஜா வரவேற்றாா். ஒன்றியச் செயலாளா் வைத்தியநாதன் நன்றி கூறினாா். கூட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலாளா்கள் காமராஜ், லண்டன் அன்பழகன், இளைஞரணி விமல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.