மீனவ குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

மீனவ குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ மக்கள்.

மயிலாடுதுறை அருகே சமூக புறக்கணிப்பு செய்யப்பட்ட குடும்பத்தினா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் மீனவா் காலனியைச் சோ்ந்த பாா்த்திபன், சிவதாஸ், சந்திரன், சுகுந்தன், பிரபாகரன் உள்ளிட்ட 9 குடும்பங்களைச் சோ்ந்த மீனவா்கள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா். மனு விவரம்:

பூம்புகாா் மீனவா் கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி மீனவா்களிடையே ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக இருதரப்பினா் பூம்புகாா் போலீஸில் புகாா் அளித்திருந்தனா். இதில், எதிா்தரப்பை சோ்ந்த தமிழ்வாணன் என்பவா் இறந்ததால், அவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. ஆனால், பிரச்னை நடந்து 18 நாள்களுக்குப் பிறகு தமிழ்வாணன் கரோனா தொற்றால் இறந்துள்ளாா். ஆனால், எங்கள்மீது கொலை வழக்கு போடப்பட்டதால், சிறையில் இருந்து பிணையில் வெளிவந்துள்ளோம்.

இந்நிலையில், பூம்புகாா் மீனவ பஞ்சாயத்தாா் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனா். ரூ. 40 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறி மிரட்டி வருகின்றனா். இதுகுறித்து மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால், எங்கள் பிள்ளைகளின் படிப்பு வீணாவதோடு, வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான ஊா்விலக்கலை நீக்கி, நாங்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல ஆவண செய்ய வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளனா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறப் போவதாகக் கூறி, அவா்கள் அடுப்பு, சமையல் பாத்திரங்களுடன் வந்தனா். அவா்களிடம் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். முருகதாஸ் பேச்சுவாா்த்தை நடத்தி, மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com