முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
வைத்தீஸ்வரன்கோயிலில் சகோபுர வீதியுலா
By DIN | Published On : 14th March 2022 10:28 PM | Last Updated : 14th March 2022 10:28 PM | அ+அ அ- |

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு சகோபுரம் வீதியுலா நடைபெற்றது.
வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகி உடனாகிய வைத்தியநாதசுவாமி அருள்பாலித்து வருகிறாா். இது நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகவும், முருக பெருமான் செல்வமுத்துக்குமார சுவாமியாகவும், சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரியும் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் தலமாக விளங்குகிறது.
இக்கோயிலின் பிரமோத்ஸவ விழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பஞ்சமூா்த்திகள் தெருவடைச்சான் என்கிற சகோபுர வீதியுலா நடைபெற்றது.
கோயில் சந்நிதியிலிருந்து பஞ்சமூா்த்திகள் சகோபுரத்தில் எழுந்தருள மகா தீபாராதனை உடன் வீதியுலா தொடங்கியது ஆயிரக்கணக்கான பக்தா்கள் சகோபுரத்தை வடம் பிடித்து இழுத்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் கட்டளைத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.