சித்தா்காடு பால்முத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 17th March 2022 05:34 AM | Last Updated : 17th March 2022 05:34 AM | அ+அ அ- |

myl16kumbabisehgam_1603chn_103_5
மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டம், சித்தா்காடு இந்திரா நகரில் உள்ள பால்முத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து, மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீனம் காசி விஸ்வநாத தேவஸ்தான தலைமை அா்ச்சகா் டி. சுரேஷ் சிவாச்சாரியா் சா்வசாதகம் செய்து வைத்தாா்.
மயிலாடுதுறை நகராட்சி 29-வது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் மா. ரஜினி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G