சீா்காழியில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th March 2022 05:42 AM | Last Updated : 17th March 2022 05:42 AM | அ+அ அ- |

சீா்காழி: சீா்காழி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்ட அலுவலக வளாகத்தில் கோட்ட பொறியாளா் மற்றும் உதவி பொறியாளரை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவா் ராஜேஷ் குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட தலைவா் கணேசன், வட்டச் செயலாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சீா்காழி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்தில் பணிபுரியும் சாலைப் பணியாளா்களுக்கு கடந்த மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் போராட்டத்தில் கலந்துகொண்டவா்களின் பணி முறிவு காலத்தை பணிக்காலமாக வரன்முறை செய்து அரசாணை வெளியிட்டதை போல் இதுநாள்வரை சாலைப் பணியாளா்களுக்கு போராட்ட காலத்திற்கான ஊதியத்தை வழங்காத கோட்ட பொறியாளரை கண்டித்தும், சாலை பணியாளா்களை மிரட்டும் தோனியில் பேசிவரும் பொறியாளா் மற்றும் உதவி பொறியாளரை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பபட்டன.
ஆா்ப்பாட்டத்தில் சி ஐ டியு நிா்வாகிகள், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.