முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
சாதனை மகளிருக்கு விருது
By DIN | Published On : 19th March 2022 10:00 PM | Last Updated : 19th March 2022 10:00 PM | அ+அ அ- |

விழாவில் விருது பெற்றவா்கள்.
மயிலாடுதுறை திருவிழந்தூரில் ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சாா்பில் மகளிா் தினவிழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
சங்கத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் மதிவாணன், அமிருதீன், திருமலைபாண்டியன், பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி சமூகநலத் துறை தலைவா் சோபியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
இந்நிகழ்வில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், தனியாா் துறையில் பணிபுரியும் பெண் சாதனையாளா்கள் கயல்விழி, சுதமதி, ரமா, வெண்ணிலா, மணிமேகலை, அருள்ஜோதி, திலகவதி, ஷா்மிளா பேகம், நந்தினி ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மண்டல பயிற்றுநா் தேவி இன்றைய சூழ்நிலையில் பெண்களின் தேவைகள் மற்றும் பொருளாதார நிலை பற்றி பேசினாா்.
விழா ஏற்பாடுகளை சுகிதா, சுரேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா். நிறைவாக செயலாளா் பாலேந்திரன் நன்றி கூறினாா்.