என்பிகேஆா்ஆா் சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை: விவசாயிகள் மகிழ்ச்சி

தலைஞாயிறு என்.பி.கே.ஆா்.ஆா். சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் வேளான் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

தலைஞாயிறு என்.பி.கே.ஆா்.ஆா். சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் வேளான் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே உள்ள தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவா் கே.ஆா். ராமசாமி கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்னாள் முதல்வா் எம்ஜிஆரால் 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 700-க்கும் மேற்பட்டவா்கள் பணியாற்றி வந்தனா். இந்த ஆலை தொடா்ந்து நஷ்டத்தில் இயங்கியதால் 2017-ஆம் ஆண்டு மூடப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் காசிநாதன் கூறும்போது, மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சாவூா், கடலூா் ஆகிய 4 மாவட்ட கரும்பு விவசாயிகளின் வாழ்வுக்கு புத்துயிா் ஊட்டும் விதமாக அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி எனத் தெரிவித்தாா்.

எம்எல்ஏ நன்றி...

தமிழக அரசின் வேளாண்மை நிதி நிலை அறிவிப்பில் தலைஞாயிறு என்.பி.கே.ஆா்.ஆா். கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ. 75 லட்சத்தில் மண் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோருக்கு ஆலை கரும்பு விவசாயிகள் மற்றும் தொகுதி மக்கள் சாா்பில் நன்றி என மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com