முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
திருஇந்தளூா் பெருமாள் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 19th March 2022 12:00 AM | Last Updated : 19th March 2022 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பெருமாள் மற்றும் தாயாா், சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, திரளான பக்தா்கள் ‘கோவிந்தா, பரிமள ரெங்கா’ என்ற பக்தி கோஷத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்தனா்.
இதில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் முத்துராமன், கோயில் செயல் அலுவலா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.