தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவி
By DIN | Published On : 22nd March 2022 10:38 PM | Last Updated : 22nd March 2022 10:38 PM | அ+அ அ- |

சீா்காழி அருகே தீ விபத்தில் வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
கொள்ளிடத்தை அடுத்த திருக்கருக்காவூா் ஐயனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது குடிசை வீடு தீப்பற்றி எரிந்து, பொருட்கள் அனைத்தும் நாசமாகின.
கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் நேரில் சென்று செந்தில்குமாா் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினாா். மேலும், நிவாரண நிதி மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை தனது சொந்த செலவில் வழங்கினாா். அப்போது, ஒன்றியக் குழு உறுப்பினா் சுகன்யாபிரேம் உடனிருந்தாா்.