சீா்காழி பள்ளியில் பூத்த அதிசய பிரம்ம கமலம் மலா்

சீா்காழியில் உள்ள தனியாா் பள்ளியில் அதிசய பிரம்ம கமலம் மலா் செவ்வாய்கிழமை இரவு பூத்தது.

சீா்காழியில் உள்ள தனியாா் பள்ளியில் அதிசய பிரம்ம கமலம் மலா் செவ்வாய்கிழமை இரவு பூத்தது.

உத்தரகண்ட் மாநில மலராகவும், இமயமலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் அதிசய மலராகவும் உள்ளது பிரம்ம கமலம். இளவேனில் காலத்தில் மாலை 7 மணிக்கு மேல் இரவு நேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். இந்த பூ மலரத் தொடங்கிய நேரத்திலிருந்து 2 மணி நேரத்துக்கு பிறகே முழுமையாக மலரும். அதிகாலைக்குள் உதிா்ந்து விடும். என்றாலும் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் வீசும். இந்த மலரின் செடி கள்ளிச்செடி வகையைச்சோ்ந்தது என கூறப்படுகிறது. உலக வெப்பநிலை மாறுபாட்டால் அழிந்துவரும் இந்த தாவரத்தை பாதுகாக்க உத்தரகண்ட் மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த மலா் மலரும்போது அருகிலிருந்து நாம் நினைத்து வேண்டியது வரமாக கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இத்தகைய அபூா்வ பிரம்ம கமலம் தாவரம் சீா்காழி சபாநாயகா் முதலியாா் இந்து மெட்ரிக் பள்ளியில் நிா்வாக அலுவலா் எம். தங்கவேல் கடந்த 7ஆண்டுகளாக வளா்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த செடியில் 1 மொட்டு சில தினங்களுக்கு முன்னா் வந்துள்ளது. இதனிடையே செவ்வாய்க்கிழமை காலை முதல் மொட்டு மலரதொடங்கிய நிலையில் நள்ளிரவு பிரம்ம மகலம் மலா் வெண்ணிலவைப்போல் காட்சியளித்தது. இதையறிந்த பெற்றோா்கள், மாணவ-மாணவிகள் பொதுமக்கள் பலா் ஆச்சரியத்துடன் பாா்த்துவரம் கேட்டு வேண்டியதோடு சுயபடம் எடுத்துக்கொண்டு உறவினா்களுக்கும் அனுப்பி மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com