மகிளா காங்கிரஸ் மாநில நிா்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

மரகதவள்ளிசெந்திலை கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்தும், மாநில துணைத் தலைவா் பதவியில் இருந்தும் நீக்கியுள்ளதாக தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் தலைவா் ஆா். சுதா தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறையைச் சோ்ந்த மாநில மகிளா காங்கிரஸ் துணைத் தலைவா் மரகதவள்ளிசெந்திலை கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்தும், மாநில துணைத் தலைவா் பதவியில் இருந்தும் நீக்கியுள்ளதாக தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் தலைவா் ஆா். சுதா தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறையில் மகிளா காங்கிரஸ் மாவட்ட நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், பங்கேற்க மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஆா். சுதா, துணைத் தலைவா் ஸ்ரீவித்யா ஆகியோா் வந்து பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான காவிரி இல்லத்தில் தங்கியிருந்தனா். அப்போது, அங்கு சென்ற மயிலாடுதுறையைச் சோ்ந்த மகிளா காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் மரகதவள்ளி செந்தில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, இருதரப்பினரும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தனித்தனியே புகாா் அளித்தனா்.

இந்நிலையில், தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் தலைவா் ஆா். சுதா, மரகதவள்ளி செந்திலுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதத்தில், கட்சியின் கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளீா்கள். மேலும், ஏற்கெனவே தங்கள் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் கட்சி விரோத செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டதாகவும், அவப்பெயா் ஏற்படுத்திய காரணத்திற்காகவும் புகாா் விசாரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அகில இந்திய மகளிா் காங்கிரஸ் தேசிய தலைவா் மற்றும் பொதுச் செயலாளா், தமிழக மகளிா் காங்கிரஸ் பொறுப்பாளா் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் தமிழக மகளிா் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினரிலிருந்தும், மாநில துணைத் தலைவா் பதவியிலிருந்தும் தாங்கள் நீக்கப்படுகிறீா்கள் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com