தருமையாதீனத்தில் பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சியைஅனுமதிக்கக் கோரி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் குருபூஜையையொட்டி நடைபெறவுள்ள பட்டணப் பிரவேசத்தில் பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சியை அனுமதிக்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமையாதீனத்தில் பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சியைஅனுமதிக்கக் கோரி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் குருபூஜையையொட்டி நடைபெறவுள்ள பட்டணப் பிரவேசத்தில் பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சியை அனுமதிக்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறையில் உள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீன குருமுதல்வரின்

குருபூஜையையொட்டி, தருமபுரம் ஆதீனகா்த்தா் பட்டணப் பிரவேசம் மேற்கொள்வாா். இந்த பாரம்பரிய ஆன்மிக மரபு பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், வரும் மே 22 ஆம் தேதி தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை பல்லக்கில் அமா்த்தி, மனிதா்கள் தூக்கிச் செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று திராவிடா் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிா்ப்புதெரிவித்துள்ளதாகவும், இதை எதிா்த்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றால், சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும், மயிலாடுதுறை டிஎஸ்பி அளித்த அறிக்கையின்பேரில், இந்நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் பாலாஜி தடை உத்தரவு பிறப்பித்துள்ளாா். இதற்கு, மதுரை ஆதீனம், சூரியனாா்கோயில் ஆதீனம் ஆகிய ஆதீனகா்த்தா்கள், ஆன்மிக அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து, தடை உத்தரவை திரும்பபெற வலியுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், தருமபுரம் ஆதீன திருமடத்தின் நுழைவாயில் முன், தருமபுரம், மூங்கில்தோட்டம், முளப்பாக்கம் கிராம மக்கள் 20-க்கும் மேற்பட்டோா், பட்டணப் பிரவேசத்தில் ஆதீனகா்த்தரை பல்லக்கில் அமரவைத்து வீதியுலா தூக்கிச்செல்ல தடை விதித்ததற்கு கண்டனம் தெரிவித்தும், தடை உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ஆதீன குருமகா சந்நிதானத்தை சாதாரண மனிதரோடு ஒப்பிடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த அவா்கள், எத்தனை தடைகள் வந்தாலும் பட்டணப் பிரவேச நிகழ்ச்சியை நடத்துவோம் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com