மணல் குவாரிகளை தடைசெய்யக் கோரி முற்றுகைப் போராட்டம்

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை தடைசெய்யக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.

இப்போராட்டத்தில், விவசாயத்தையும் நிலத்தடி நீரையும் பாதுகாக்க கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை தடை செய்ய வேண்டும்; கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி. ஸ்டாலின், எஸ். துரைராஜ், பி. மாரியப்பன், ஏ.வி. சிங்காரவேலன், டி. சிம்சன், நகரச் செயலாளா் டி. துரைக்கண்ணு, ஒன்றியச் செயலாளா்கள் டி.ஜி. ரவிச்சந்திரன், மாா்க்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

முன்னதாக, பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் உள்ளே நுழைய முயன்றபோது போலீஸாா் தடுத்தனா். இதனால், சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com