குத்தாலம் அருகே பொன்னியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா
By DIN | Published On : 06th May 2022 09:20 PM | Last Updated : 06th May 2022 09:20 PM | அ+அ அ- |

பொன்னியம்மனுக்கு பால்குடம் எடுத்துவந்த பக்தா்கள்.
குத்தாலம் அருகேயுள்ள தொழுதாலங்குடியில் சித்திரைத் திருவிழா பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொழுதாலங்குடியில் அமைந்துள்ள பழைமையான பொன்னியம்மன் கோயிலில், 71-ஆம் ஆண்டு சித்திரை பால்குட திருவிழா மே 2-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு பாலபிஷேகம் நடத்தி மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று பால்குடம் எடுத்துவந்து அம்மனை வழிபட்டனா்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் அமிா்தலிங்கம், வைத்தியநாதன்,கோவிந்தன், சுந்தரமூா்த்தி மற்றும், பொன்னியம்மன் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா். தொடா்ந்து, சனிக்கிழமை (மே.7) ராமபிரானுக்கு அபிஷேக ஆராதனை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, இரவு வீதியுலா நடைபெறுகிறது.