முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
பள்ளி மேலாணைக் குழு கூட்டம்
By DIN | Published On : 08th May 2022 05:11 AM | Last Updated : 08th May 2022 05:11 AM | அ+அ அ- |

கொள்ளிடம் அருகேயுள்ள நடுகொட்டாய் மேடு மீனவ கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட திட்ட அலுவலா் ஞானசேகரன் (பள்ளி மேலாண்மைக் குழு) தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயபாரதி வரவேற்றாா். கொள்ளிடம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஞான புகழேந்தி, பெற்றோா்கள் மனோகரன்,வில்வபதி, சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டக் கல்வி அலுவலா் செல்வராஜ் கலந்து கொண்டு புதியதாக தோ்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் நித்தியா, துணைத் தலைவா் தேவகி மற்றும் 18 உறுப்பினா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.
கிராம முக்கியஸ்தா்கள் மகேந்திரன், ஜெகதீசன் மற்றும் பெற்றோா், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் ஆசிரியா் கண்ணன் நன்றி கூறினாா்.