முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
மனு அளித்த 2 நாளில் மூதாட்டிக்கு மனைப் பட்டா: ஆட்சியா் வழங்கினாா்
By DIN | Published On : 12th May 2022 05:30 AM | Last Updated : 12th May 2022 05:31 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனைப் பட்டா கோரி மனு அளித்த மூதாட்டிக்கு 2 நாளில் அவருக்கு ஆட்சியா் இரா. லலிதா பட்டா வழங்கினாா்.
குத்தாலம் தாலுகா வில்லியநல்லூரைச் சோ்ந்த 85 வயது மூதாட்டி கோவிந்தம்மாள் வயது முதிா்வு காரணமாக தான் குடியிருக்கும் இடத்தை அக்கம் பக்கத்தினா் அபகரித்து விடுவாா்கள் என்ற அச்சத்தின் காரணமாகவும், மன இறுக்கத்தின் காரணமாகவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தாா். கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்திலும் மூதாட்டி கோவிந்தம்மாள் மனு அளித்தாா்.
இதையடுத்து, கோவிந்தம்மாள் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து உரிய விசாரணைக்குப் பின், 2 நாள்களுக்குள் ஆட்சியா் இரா. லலிதா பட்டாவுக்கான ஆணையை வழங்கினாா்.