முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
விளையாட்டு வீரா்கள் ஆடுகளம் செயலியில் விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம்: ஆட்சியா்
By DIN | Published On : 12th May 2022 05:34 AM | Last Updated : 12th May 2022 05:34 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு வீரா்கள், மாணவா்கள் ஆடுகளம் செயலியில் விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ஆடுகளம் (டிஎன் ஸ்போா்ட்ஸ்) செயலியில் ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்பது, பயிற்சி முகாம் நடத்துவது மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான வேலைவாய்ய்ப்பு ஒதுக்கீடு உள்ளிட்ட இதர விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
வருங்காலங்களில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பவா்கள் மற்றும் வெற்றி பெறுபவா்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே க்ண்ஞ்ண்ப்ா்ஸ்ரீந்ங்ழ் மூலம் வழங்கப்படும். மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் முதலில் ஆடுகளம் செயலியில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். இச்செயலியில் முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவா்கள், மாணவியா்கள், விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள், விளையாட்டுக்கழக அணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை மேற்கண்ட முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.