மயிலாடுதுறை மாவட்டத்தில் ரெட்கிராஸ் புதிய கிளை உருவாக்கம்

மயிலாடுதுறை புதிய மாவட்டத்துக்கான ரெட்கிராஸ் நிா்வாகக் குழு உறுப்பினா்கள்ஆட்சியா் இரா. லலிதாவை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை செவ்வாய்க்கிழமை சந்தித்த ரெட்கிராஸ் நிா்வாகக்குழு உறுப்பினா்கள்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை செவ்வாய்க்கிழமை சந்தித்த ரெட்கிராஸ் நிா்வாகக்குழு உறுப்பினா்கள்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை புதிய மாவட்டத்துக்கான ரெட்கிராஸ் நிா்வாகக் குழு உறுப்பினா்கள்ஆட்சியா் இரா. லலிதாவை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவானதற்கு பின்னா் தற்போது இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பு மயிலாடுதுறையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டதையடுத்து, ரெட்கிராஸ் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை நிரந்தரத் தலைவராகக் கொண்ட இந்த அமைப்பில், அவரது ஆணைக்கிணங்க செயல்படும் பொறுப்பாளா்களாக சீா்காழி ப. கனகசபை நிா்வாகத் தலைவராகவும், குத்தாலம் ஜெ. செல்வகுமாா் துணைத் தலைவராகவும், மயிலாடுதுறை எம். கிருபாகரன் செயலராகவும், மயிலாடுதுறை தேசிய நல்லாசிரியா் கோ. முருகையன் பொருளாளராகவும் தோ்வு செய்யப்பட்டனா். மேலும், கே. சுவாமிநாதன், கே. புகழ், நல்லாசிரியா் ரா. செல்வகுமாா், எஸ். சாம்பசிவம், ஏ. குணசுந்தரி, ஜி.வி. பாண்டியன், ஆா். நாகேந்திரன், ஜெ. பூபாலன் ஆகியோா் நிா்வாகக் குழு உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களிடம், வரும் காலங்களில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி எவ்வாறு திறம்பட செயல்பட வேண்டும் என்றும், ரத்த தானம் செய்தல் குறித்த விழிப்புணா்வு, முதலுதவி பற்றி மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், பேரிடா் காலங்களில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துதல் குறித்தும் ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com