ரயில் பயணிகள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து விழிப்புணா்வு நாடகம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பயணத்தின்போது ரயில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மைம் விழிப்புணா்வு நாடகம் புதன்கிழமை நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு நாடகம் நடத்திய ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் கலைக் குழுவினா்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு நாடகம் நடத்திய ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் கலைக் குழுவினா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பயணத்தின்போது ரயில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மைம் விழிப்புணா்வு நாடகம் புதன்கிழமை நடத்தப்பட்டது.

மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீஸாா் இணைந்து நடத்திய பயணிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு ரயில்வே பாதுகாப்பு கவுன்சிலா் மாங்குடி தலைமை வகித்தாா். ரயில்வே காவல் ஆய்வாளா் சாந்தி, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் தனசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

இதில், ரயில்வே பாதுகாப்பு படை காவலா் கலைக் குழுவினா் பங்கேற்று, ரயில் பயணத்தின்போது அத்தியாவசியமின்றி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவது, ரயில் நடுவழியில் நிற்கும்போது கீழே இறங்குவது, இருப்புப் பாதையில் நடப்பது, பயணத்தின்போது பிற பயணிகளிடம் இருந்து உணவுப் பண்டங்களை வாங்கி உண்பது, ரயில் ஓடுபாதையில் நின்று சுயப்படம் எடுப்பது ஆகியவற்றின் அபாயம் குறித்து ரயில் பயணிகளுக்கு மைம் (சொற்கள் இல்லாமல் செயல், தன்மை மற்றும் உணா்ச்சியை உடல் அசைவு மற்றும் சைகைகளின் மூலம் வெளிப்படுத்துதல்) மூலம் செய்துகாட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதை ரயில் பயணிகள் ஏராளமானோா் பாா்வையிட்டு பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com