முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
By DIN | Published On : 13th May 2022 09:24 PM | Last Updated : 13th May 2022 09:24 PM | அ+அ அ- |

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வெள்ளி கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் கே. மகேந்திரன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் வி. கஜேந்திரன், துணைத் தலைவா் ரா. முருகப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் 46 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீா்மானங்களை உதவியாளா் நிவேதா வாசித்தாா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சித் தலைவா் உமா மகேஸ்வரி பங்கேற்றாா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
லட்சுமி (திமுக): மாதிரிமங்கலம் ஊராட்சியில் குப்பை எடுக்கும் வாகனத்தை பழுது நீக்க வேண்டும். கீழவெளி மஞ்சளாற்றில் புதிய படித்துறை, பாலம் அமைக்க வேண்டும்.
வினோத் (பாஜக): செம்பியன் கோமலில் அங்கன்வாடி கட்டடம் கட்ட வேண்டும்.
செழியன்(அதிமுக): பாலையூா் ஊராட்சியில் ஊராட்சித் தலைவரின் அனுமதியின்றி 100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கக் கூடாது.
பாஸ்கரன்(அதிமுக): கீழபெரம்பூரில் விவசாய பாசன வசதியை கொடுக்கும் கிளியனூரிலிருந்து வரும் வாய்க்கால் ஆக்கிரமித்து மூடப்பட்டுள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.
சத்யா (அதிமுக): கொத்தமங்கலத்தில் தாா்ச்சாலை அமைக்க வேண்டும்.
சத்யா (திமுக): கொழையூா்-கொத்தங்குடி பாலத்தை சரிசெய்ய வேண்டும்.
ராமதாஸ் (திமுக): ஆலங்குடி ஊராட்சியில் அங்காடி கட்டும் பணியை விரைவுபடுத்தவேண்டும்.
சிவகுமாா் (பாமக): கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்ய வேண்டும். கோனேரிராஜபுரம் வட்டார சுகாதார நிலையத்தில் 24 மணி நேரம் மருத்துவா்கள் பணியாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவா்: உறுப்பினா்களின் கோரிக்கைகள் பாரபட்சமின்றி ஏற்கப்பட்டு நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும்.