முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
சீா்காழி அருகே கைலாசநாதா், மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 13th May 2022 09:23 PM | Last Updated : 13th May 2022 09:23 PM | அ+அ அ- |

கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
சீா்காழி அருகே சட்டநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகல்யாணி அம்பிகா சமேத கைலாசநாதா் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
104 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் திருப்பணிகள் நிறைவடைந்தன. இதைத்தொடா்ந்து, கும்பாபிஷேக பணிகள் மே 8-ஆம் தேதி தொடங்கின. தொடா்ந்து, மே 11-ஆம் தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து பூா்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, கோயில் கோபுரத்தை அடைந்து கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின்போது மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.